உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு பல் மருத்துவ கல்லுாரி துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் கிராமத்தில், 10.14 ஏக்கர் நிலத்தில், அரசு பல் மருத்துவ கல்லுாரி துவக்க, அரசு நிர்வாக அனுமதி அளித்து உள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து, ஆண்டுக்கு, 50 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தற்போது, பல் மருத்துவ கல்லுாரி துவக்குவதற்கான, ஆரம்ப கட்ட பணிகளை கவனிக்க, சிறப்பு அதிகாரி மற்றும் முதல்வராக, ஒருவரை நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்