உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் எதிர்பார்ப்பு

கோவை: தொற்று பரவும் காலத்தில், பொதுத்தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்கு, கவனசிதறல் ஏற்படாமல் இருக்க, ஆன்லைனில் கவுன்சிலிங் வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.கல்வியாளரும், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில ஆலோசகருமான பாலகிருஷ்ணன் கூறுகையில், &'&'பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மத்தியில், பல்வேறு குழப்பங்களும், கவனசிதறல்களும் ஏற்படுவது வழக்கம் தான். பள்ளி நாட்களில், ஆசிரியர்கள் ஊக்குவிப்பர். தற்போதைய சூழலில், மாணவர்களை ஊக்குவிக்க, ஆன்லைன் மற்றும் கவுன்சிலிங் மையங்கள் அமைக்க, கல்வித்துறை முன்வர வேண்டும். தேர்வு சார்ந்த அறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்