ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய வேண்டும்
சென்னை: இணைய வழியில் நடைபெறும் வகுப்புகளை பதிவு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வரும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி த்துறை ஆணையர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர், உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆன்லைன் வகுப்பின் போது முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல் குறித்து ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.இணைய வழியில் நடைபெறும் வகுப்புகளை அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்யப்படுவதை பள்ளி நிர்வாகம் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் கொண்ட 2 பேர் குழு பதிவை ஆய்வு செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகள் புகார் அளிக்கவும் உதவி எண்களை உருவாக்க வேண்டும். புகார்கள் மீது சைபர் கிரைம் எஸ்.பிக்கு நிகரான அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.