விரைவில் தேர்ச்சி விபரம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
புதுடில்லி: விரைவில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன&' என, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., தேர்வு வாரியத்தின் செயலாளர் அனுராக் திரிபாதி கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் அடுத்தடுத்து முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் துவங்கிவிட்டன. இந்த நடவடிக்கைகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்தாக வேண்டுமென்பதை உணர்ந்துள்ளோம். அதற்கேற்ப எங்களது பணிகள் இருக்கும்.தேர்ச்சி விபரங்களை முடிவு செய்து அறிவிப்பதற்கு குறைந்த இடைவெளிதான் எடுக்கப் போகிறோம். மிகுந்த கவனத்துடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.தேர்ச்சி வழிமுறைகளில் திருப்தி ஏற்படாமல், முடிவுகளை ஏற்க மறுத்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மாணவர்களில் சிலர் கருதலாம். அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு மீண்டும் தனியாக தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.