உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்: பதின்பருவத்தினரை காப்பாற்றுங்கள்!

த.ராஜேஸ்வரி, சென்னையிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்:கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என பெரும்பாலான கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி உள்ளது. கோவில், கடை, போக்குவரத்து என அனைத்திற்கும் அனுமதி அளித்த அரசு, இந்த பள்ளிகளையும் திறந்து பாடங்களை நடத்த உத்தரவிடலாமே.போதும் இந்த &'ஆன்லைன்&' வகுப்பு!பள்ளியில் அனைத்து வகுப்புகளும் நடத்த முடியாவிட்டாலும், இந்த 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளையாவது துவக்கலாமே.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு &'ஷிப்ட்&' அடிப்படையிலும் வகுப்புகளை நடத்தலாம். வகுப்பறை பாதுகாப்பில்லை என நினைத்தால், மரத்தின் அடியிலாவது போதிய இடைவெளியில் மாணவர்களை அமர்த்தி பாடம் எடுங்கள். கிராமப்புற பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் இல்லாத காரணத்தால் மாடு மேய்க்கவும், கூலி வேலைக்கும் செல்லும் நிலையில் பிள்ளைகள் உள்ளனர். பள்ளிகள் திறக்க தாமதம் ஏற்படும் காலத்தில், நாம் குழந்தை தொழிலாளர்களை தான் உருவாக்கி வருகிறோம்.படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது என்பது கண்கூடு.ஆன்லைன் வகுப்பு நேரத்தில், பெற்றோர் உடன் இருந்து தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க முடியவில்லை.மொபைல் போன் கையில் வைத்திருக்கும் சிறுவர்கள் அதை படிப்பிற்கு மட்டும் உபயோகிக்கவில்லை; &'வீடியோ கேம்&' ஆடுவது, சமூக வலைதளங்களில் உலாவுவது என, அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆன்லைன் வழியே நடத்தும் தேர்வும் முறையாக இல்லை. கணக்கு, அறிவியல் போன்ற பாடங்கள் நேரடியாய் சொல்லி தரும் போதே எளிமையாய் புரிந்து விடாது. ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறன் அறிந்து, தன் நேரடி பார்வையின் கீழ் ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும்.ஆன்லைன் வழியே கற்பித்தல் என்பது நிரந்தரம் அல்ல; அது தற்காலிக தீர்வு! பதின்பருவத்தினர் சுலபமாய் சீரழிந்து விடுவர். அவர்கள் கையிலிருந்து புத்தகப் பையை பிடுங்கி, மொபைல்போனை கொடுத்து, வருங்கால துாண்களை குட்டிச்சுவராக்கி வருகிறோம்.தமிழக அரசு, பள்ளிகளை திறந்தால் கொரோனா பரவல் வந்துவிடும் என நினைக்கிறதா? அதிகாரிகளே, கொஞ்சம் வெளியில் வந்து பாருங்கள்... மார்க்கெட், இறைச்சி கடை, கோவில், சுற்றுலா தலங்களில் குழந்தைகளுடன் மக்கள் கூடும் கூட்டத்தை!தயவு செய்து பள்ளியை திறந்து, குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்