நிர்வாகத் திறமையில் இந்தியரை மிஞ்ச முடியாது
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தனியார் சர்வே நிறுவனம் கனெக்சா; மனித வளம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவன ஊழியர்களிடையே மனித ஆற்றல் குறித்த ஆய்வு ஒன்றை சர்வதேச அளவில் நடத்தியது. உலகில் உள்ள நாடுகளான பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன், ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரத்து 929 பேரிடம் ஆன்-லைன் மூலம் சர்வே நடத்தியது. இந்தியாவைச் சேர்ந்த 1,000 ஊழியர்களிடம் சர்வே எடுத்ததில், தங்களிடம் மேலாளர்கள் நிர்வாகத் திறமை உள்ளதை 65 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டனர். உலகளவில், இந்த சதவீதம் 60 தான்; அதை தாண்டி இந்தியாவில் மேலாளர்களின் நிர்வாகத் திறமை உள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்கா 60, ரஷ்யா 57, கனடா 56, சீனா 53 சதவீத நிர்வாகத்திறமை, பல்வேறு நிறுவன மேலாளர்களிடம் இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது.