உள்ளூர் செய்திகள்

பியூன் வேலை கேட்கும் எம்.பி.ஏ.,கள், வக்கீல்கள்

அவர்களில், எம்.பி.ஏ., எம்.பி.எல்., மற்றும் எல்.எல்.பி., படித்தவர்களும் அடங்குவர்.பஞ்சாப் மாநிலம் பதீந்தா மாவட்ட கோர்ட் தன்னிடம் காலியாக உள்ள எட்டு பியூன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பும், வயது தகுதியாக 18 வயதிலிருந்து 35 வயது என்றும் நிர்ணயித்து இருந்தது. கடந்த வாரம் நடந்த இண்டர்வியூக்கு 1,200 பேர் வந்திருந்தனர்.எம்.பி.ஏ., எம்.பி.எல்., சட்டப்படிப்பு படித்தவர்களும், எல்.எல்.பி., படித்த இருவரும், முதுகலை பட்டதாரிகள் சிலரும் வந்திருந்தனர். பி.எஸ்சி., எம்.ஏ., எம்.எஸ்சி., டபுள் எம்.ஏ., பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களும் இன்டர்வியூக்கு வந்திருந்தனர். அவர்கள் கூறுகையில் வறுமையின் காரணமாக வேறு வழியில்லாததால் இந்த வேலை தேடி வந்தோம் என்றனர்.இதே போன்று, கோர்ட்டுக்குள் சம்மன் எடுத்து செல்லும் பையாதா பணிக்கான நான்கு காலியிடங்களுக்கு 900 பேர் வந்திருந்தனர். இவர்களுக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குல்தீப் சிங், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சச்தேவ் இண்டர்வியூ நடத்தினர்.தேசிய அளவில் வேலையின்மை சராசரி 6.8 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், பஞ்சாபில் 9.1 சதவீதமாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்