கல்லூரி ஆசிரியர் குழு போராட்டம் அறிவிப்பு
தமிழக கல்லூரி ஆசிரியர் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை ஒருமைப் பல்கலைக் கழகங்களாக மாற்றுவதற்கு, தமிழக கல்லூரி ஆசிரியர் குழு (ஜெ.ஏ.சி.,) நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தவும், 26ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு தனது முடிவை கைவிடவில்லையென்றால், தேர்வுகள் தொடர்பான பணிகளை புறக்கணிக்கவும், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், 2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தற் போது அமல்படுத்தப்பட்டுள்ள, பங்கேற்பு ஊதிய திட்டத்தை தவிர்த்து, வரையறுக்கப் பட்ட ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டுமெனவும் முடிவெடுத்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.