உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நிரப்புதல்

மதுரை: விருதுநகர், நெல்லை மற்றும் திண்டுக்கல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், இளநிலை விரிவுரையாளர்களாக பணிபுரியும் சுதா, கலாராணி, உமாதேவி, மேரி ஜான்சி, சிவக்குமார், நாகரத்தினம், பத்மநாபன் தாக்கல் செய்த ரிட் மனு: தமிழக அரசு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 156 காலி விரிவுரையாளர் பணியிடங்களை, நிரப்பவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், காலியான விரிவுரையாளர் பணியிடங்களை, நிரப்புகையில் ஐம்பது சதவீதம், ஏற்கனவே பணிபுரியும், இளநிலை விரிவுரையாளர்களை கொண்டும், மீதமுள்ள 50 சதவீத பணியிடங்களை நேரடியாக நிரப்பவும், 2007ல் அரசு உத்தரவிட்டுள்ளது.  காலியான 156 பணியிடங்களில், 78 பணியிடங்களை, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும், இளநிலை விரிவுரையாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும், நேரடியாக நிரப்ப, 2009 அக்., 6ல், அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 50 சதவீத பணியிடங்களை பணிபுரியும், இளநிலை விரிவுரையாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஜி.சந்திரசேகர் ஆஜரானார். நீதிபதி கே.என்.பாஷா, “அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நிரப்பப்படும் விரைவுரையாளர் பணியிடங்கள் அனைத்தும் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்