உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 21 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். விழாவிற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மெட்ராஸ் இந்தியா தொழில்நுட்பக் கழக முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று பட்டமளிப்பு விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்தார். அவர் சென்னையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். அதனால் பட்டமளிப்பு விழாவுக்கு வரவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாமக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புபட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த பாமக எம்.எல்.ஏக்கள் அருள், சதாசிவம் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். மேலும், மக்கள் பிரிதிநிதிகளுக்கு பல்கலை., நிர்வாகம் உரிய மரியாதை அளிக்கவில்லை என பாமக எம்.எல்.ஏ.,க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்