உள்ளூர் செய்திகள்

நிர்வாக பணியாளர் கல்லூரிக்கு புது இணையதளம்

சென்னை: அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரிக்கு, புதிதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரி, அரசு துறைகளிலம், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிவோருக்கு, பல்வேறு நேர்முகப் பயிற்சிகளை அளித்து வருகிறது. இதுவரை காகிதத்தில் நிரப்பப்பட்டு வந்த படிவங்களை, இணைய வழிக்கு மாற்றி அமைக்கவும், கல்லுாரி குறித்த விபரங்களை, பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், புதிதாக aasc.tn.gov.in என்ற பெயரில், புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கல்லுாரி குறித்த விபரங்கள், இங்கு அளிக்கப்படும் பயிற்சிகளின் வகைகள், ஆண்டு முழுதும் பயிற்சி நடக்கும் நாட்கள் உள்ளிட்ட செய்திகள், பதிவேற்றம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்