மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் போலீஸ் ஸ்டேஷன்
திருப்பூர்: அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணியின் போது, புறக்காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. இதனால், விசாரணைக்கு வரும் போலீசார், இடமின்றி சிரமமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மருத்துவமனை நுழைவு வாயில் அருகே புதியதாக போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. 1.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று அறைகளுடன் ஸ்டேஷன் வளாகம் கட்டப்படுகிறது.தினமும் வழக்கு விசாரணைக்கு மாவட்டம் முழுதும் பல்வேறு ஸ்டேஷன்களில் இருந்து போலீசார் வருகின்றனர். இரவு நேரங்களில் ஓரிருவர் பணியில் இங்கே இருக்கின்றனர். புகார் என்றால் அதனை தெரிவிக்க மக்கள் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புதிய ஸ்டேஷன் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.