உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்க திட்டம்

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் சிட்டிஸ் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு, பிரெஞ்சு மொழியை பயிற்றுவிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகள் உட்பட 420 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 1.35 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தற்போது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டு 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் ஒவ்வொரு பள்ளிகளிலும் சுகாதாரமான குடிநீர், கழிப்பறை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான மேஜைகள் போன்ற வசதிகள் உள்ளன. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாக பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், சிட்டிஸ் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு, பிரெஞ்சு மொழியை பயிற்றுவிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கூடுதலாக பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கப்பட உள்ளது. இதற்காக சில அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதில் பிளஸ் 1 வகுப்பில் ஆர்வமுள்ள 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு மையங்களில் வகுப்புகள் நடத்தப்படும். பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைக்கும் முன்னுரிமை தொடர்பாகவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்