உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடுமலை: மொபைல்போனில் மோசடியான லிங்க் அனுப்பி அடிப்படை தகவல்களை பெற்று வங்கி கணக்கில் பணம் திருடுவது; வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவது என, பல்வேறு மோசடிகள் நடக்கின்றன.ஆண்டுதோறும், அரசு, தனியார் பள்ளிகளில் இணையவழி குற்றங்களைத் தடுத்தல் என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. கலெக்டர் உத்தரவுப்படி, உடுமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வரும் 10ம் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், நடப்பு கல்வியாண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதந்தோறும் நடத்தப்படும். குறிப்பாக, ஓவியம், பேச்சு, கதை சொல்லுதல், பேரணி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்