உள்ளூர் செய்திகள்

பி.எம்.டி.சி., பஸ் பாஸ் வழங்கல் துவக்கம்

பெங்களூரு: மாணவர்களுக்கு சலுகை கட்டண பஸ் பாஸ் வினியோகிப்பதை பி.எம்.டி.சி., துவக்கியுள்ளது. ஆன்லைனிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, பி.யு.சி., பட்டப்படிப்பு, பி.எச்.டி., மாணவ - மாணவியருக்கு பி.எம்.டி.சி., சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்குகிறது. நடப்பாண்டு பஸ் பாஸ் வழங்குவது தாமதமானது. மாணவர்களின் வசதிக்காக, 2022 - 23ம் ஆண்டில் வழங்கப்பட்ட, பாஸ்களை காண்பித்து பஸ்களில் பயணிக்க, பி.எம்.டி.சி., அனுமதி அளித்தது. இதன்படி ஜூலை 15 வரை பழைய பாஸ்களில் பயணிக்கலாம். தற்போது 2023 - 24ம் ஆண்டுக்கான, புதிய பஸ் பாஸ்களை வழங்க துவங்கியுள்ளது. சக்தி திட்டம் செயல்படுவதால் மாணவியர் இலவசமாக பயணிக்கலாம். இவர்கள் பாஸ் பெற வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்து, பஸ் பாஸ் பெறலாம்.பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:மாணவர்கள் சலுகை கட்டண, பஸ் பாஸ் பெற, சேவா சிந்து இணைய தளம் https://sevasindhu.karnataka.gov.in அல்லது http://mybmtc.karnataka.gov.in ல் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும். நேரில் விண்ணப்பிக்க விரும்புவோர் மெஜஸ்டிக் பஸ் நிலையம், ஆனேக்கல் பஸ் நிலையம், கெங்கேரி போக்குவரத்து நிர்வகிப்பு மையங்கள், சாந்தி நகர் பஸ் நிலையம், ஹொஸ்கோட் டிப்போ, எலக்ட்ரானிக் சிட்டி டிப்போக்களில் காலை 8:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்