வேளாண் பல்கலையில் ஐ.சி.ஏ.ஆர்., கமிட்டி ஆய்வு
வேளாண் சார்ந்த படிப்புகளுக்கும், கல்லுாரிகளுக்கும் ஐ.சி.ஏ. ஆர்., அமைப்பின் அங்கீகாரம் அவசியம். ஐ.சி.ஏ.ஆர்., குழு ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.அதன் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படும். இதை அடிப்படையாகக் கொண்டே, அகில இந்திய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரப்பட்டியல் வழங்கப்படுகிறது. இக்குழு, 6ம் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. வேளாண் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, 14 கல்லுாரிகளிலும் ஆய்வு நடக்கிறது. ஆராய்ச்சிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கல்வித்தரம், பாடத்திட்டம், கட்டமைப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்து மதிப்பீடு வழங்கப்படும்.