உள்ளூர் செய்திகள்

படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும்

கொடைக்கானல்: படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும் என தபோவன் இயக்குனர் தீனதயாளன் பேசினார்.கொடைக்கானலில் ஜே.சி. ஐ., சார்பில் நடந்த தொழில் முனைவோர்,உந்துதல் பயிற்சியில் அவர் பேசியதாவது:இன்றைய இளைஞர்கள் எதை நோக்கி செல்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் உள்ளனர். இளைஞர்கள் அதற்கான தெளிவு, நோக்கம் ஆகியவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் தகவல்களில் தேவையற்ற தகவல்களை தவிர்க்க வேண்டும். பொது நலனில் அக்கறை கொண்டு இருக்க வேண்டும்.படித்த இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். தபோவன் பண்ணையில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விவசாய முறை மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி,வெற்றி யுக்திகளை கற்று தருகிறோம். விவசாயம் நஷ்டம் இல்லை. விவசாயம் செய்யும் முறை நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.இதில் வெற்றி பெற வாழைகிரியில் உள்ள தபோவன் பண்ணையில் வாரந்தோறும் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது,என்றார். ஜே.சி.ஐ., முன்னாள் தலைவர் கணேஷ், பயிற்சியாளர் ஹிமாதிரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்