உள்ளூர் செய்திகள்

ஸ்டெம் லேப் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

சென்னை: சேத்துபட்டு, எம்.சி.சி., பள்ளியில், 1973ம் ஆண்டு படித்த மாணவர்கள் சேர்ந்து, தாங்கள் படித்த பள்ளிக்கு, ஸ்டெம் லேப் என்ற ஆய்வக வசதி செய்து கொடுத்துள்ளனர்.நேற்று முன்தினம் நடந்த விழாவில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே, ஆய்வகத்தை திறந்து வைத்து பேசியதாவது:புதிய தொழில்நுட்பத்தை செயல்முறை விளக்கத்துடன், பள்ளி பருவத்திலே மாணவ - மாணவியர் புரிந்து கொள்ள, ஸ்டெம் லேப் உதவும். புதிய கல்வி கொள்கை அடிப்படையில், இந்த ஆய்வக வசதி செய்யப்பட்டு உள்ளது. நீட் தேர்வு முக்கியம் தான். வந்ததை மாற்ற முடியாது. நம் குழந்தைகளை, அதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்