உள்ளூர் செய்திகள்

நேரு பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்!

கோவை: நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிக்கு, தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நவீன உள்கட்டமைப்பு, அனுபவம் வாய்ந்த திறமையான ஆசிரியர்கள், புதுமையான கற்பித்தல் முறைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இக்கல்லுாரி, தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் நாக் மற்றும் நேஷனல் போர்டு ஆப் அக்கிரடேஷன் அங்கீகாரம் பெற்ற, இளநிலை ஏரோ மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் திட்டங்களால், ஏ பிளஸ் உடன் மறு அங்கீகாரம் பெற்றுள்ளது. யு.ஜி.சி., 10 ஆண்டுகளுக்கான தன்னாட்சி அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ண குமார், அனைவருக்கும் நன்றி, பாராட்டுக்களை தெரிவித்தார். நேரு கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் பேசுகையில், ஒரு தன்னாட்சி நிறுவனமாக, நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஆற்றல்மிக்க மற்றும் தொழில்துறை தொடர்பான திட்டங்களை வழங்குகிறது. இதன்மூலம், பொறியியல் கல்வியை, மறுவரையறை செய்யத் தயாராக உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்