உள்ளூர் செய்திகள்

கோப் பஜார் செயலி கட்டணம் குறைப்பு

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கே டெலிவரி செய்ய கோப் பஜார் எனும் மொபைல் செயலி இம்மாதம் 7ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது.தற்போது, எட்டு கூட்டுறவு சங்கங்களின் மசாலா வகைகள், தேன், உரங்கள் உட்பட, 64 பொருட்களை மொபைல் செயலியில் ஆர்டர் கொடுக்கலாம். அவற்றை, வீட்டிற்கு டெலிவரி செய்யும்போது, போக்குவரத்து கட்டணமாக, 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதுவரை, 16,000 பேர் பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து கட்ட ணத்தை குறைக்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இன்று முதல் அந்த கட்டணம், 50 ரூபாயாக குறைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்