உள்ளூர் செய்திகள்

விநாயகா மிஷன் கல்லுாரி ஆண்டு விழா

புதுச்சேரி: விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.புதுச்சேரி, கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் கலை விழா நடந்தது. டீன் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். பொறுப்பு இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் தலைமை நிர்வாகி முத்துகேசவலு சிறப்புரையாற்றினார்.சின்னத்திரை நடிகர்கள் வினோத், பாலா ஆகியோரின் கலை நிகழ்ச்சி நடந்தது. விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சவீதா, அய்யம்மா, மாணவர் அமைப்பு வளர்மதி, அனிதா, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு வர்தன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்