உள்ளூர் செய்திகள்

யூ.டி.சி.,போட்டி தேர்வு ஆன்சர் கீ வெளியிடு

புதுச்சேரி: யூ.டி.சி., தேர்விற்கான விடைகளை நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டு, ஆட்சேபனைகளை வரவேற்றுள்ளது.புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 116 யூ.டி.சி., பணியிடங்களுக்கு நேற்று முன்தினம் போட்டி தேர்வு நடந்தது. இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 46,001 பேரில், 38,067 பேர் எழுதினர். மாகி, ஏனாம், காரைக்கால் பிராந்தியங்களில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் நேற்று புதுச்சேரி வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து நிர்வாக சீர்திருத்த துறை, கேள்விகளுக்கான விடைகளை வெளியிட்டு, ஆட்சேபனைகளை வரவேற்றுள்ளது.இதுகுறித்து, நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:இந்த சரியான விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், dpr--exam@py.gov.in என்ற முகவரியில் இன்று 25ம் தேதி காலை 9:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு முடிவுகள் https://recruitment.py.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்