ஆகம பள்ளி மாணவர் ஊக்கத்தொகை உயர்வு
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் சார்பில், அர்ச்சகர், ஓதுவார், தவில், நாதஸ்வரம், வேத ஆகம பாடசாலைகள் என, 15 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. படிக்கும் மாணவர்களுக்கு, உணவு, சீருடை, தங்குமிட வசதியுடன், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.கடந்த மாதம் முதல் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க, அறநிலையத் துறை கமிஷனர், அரசுக்கு செயற்குறிப்பு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, முழு நேர பயிற்சி மாணவர் ஊக்கத் தொகை, 3,000 ரூபாயை, 4,000 ரூபாயாகவும், பகுதி நேர மாணவர் ஊக்கத்தொகை, 1,500 ரூபாயை 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.