உள்ளூர் செய்திகள்

நமோ செயலி தமிழகம் மூன்றாவது இடம்

சென்னை:மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகளை கண்டறிந்து, &'நமோ&' செயலியில் பதிவேற்றுவதில், தமிழகம் மூன்றாவது இடம் பிடித்ததற்காக மகளிரணியினருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நல திட்டங்களின் பயனாளிகளை கண்டறிந்து, அவர்களின் புகைப்படங்களை, நமோ செயலியில் பதிவேற்றியதில், தமிழகம் இந்திய அளவில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில், 5,000 பயனாளிகளுக்கு மேல் புகைப்படங்களை, நமோ செயலியில் பதிவேற்றம் செய்த, பா.ஜ., மகளிர் அணியினருக்கு பாராட்டுக்கள். பதிவேற்றம் செய்த சகோதரிகள், 13 பேரில், 11 பேர் கோவை பெருங்கோட்ட மகளிரணியினர். அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்