நரேகா பெண் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு காப்பகம்
பெங்களூரு: நரேகா எனும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, 4,000 குழந்தைகள் காப்பகம் கட்ட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் கூறியதாவது:நரேகா திட்டத்தின் விதிமுறைகளின்படி, மகளிர் தொழிலாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். எனவே மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள் பெண்களாவர். இவர்களில் பலரும் இளம் பெண்கள், தாய்மார்களாவர். பணியாற்றுவதுடன், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டியுள்ளது. நரேகா திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, குடிநீர், ஓய்வறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில், பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.இங்குள்ள ஊழியர்கள், மகளிர் தொழிலாளர்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்வர். குழந்தைகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படும். காப்பகங்களில், குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும். குழந்தைகளுக்கு ஆறு வயதான பின், அவர்களை பள்ளியில் சேர்க்க, குழந்தைகள் காப்பகம் உதவும். கர்நாடகாவில், 6,000 க்கும் கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. நடப்பாண்டு பட்ஜெட்டில், குழந்தைகள் காப்பகம் திறப்பதாக, முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.