உள்ளூர் செய்திகள்

வடசென்னை புத்தக காட்சி அமைச்சர் துவக்கிவைப்பு

புதுவண்ணாரப்பேட்டை: நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கம் திருமண மாளிகையில் புத்தக கண்காட்சி துவங்கியது.வரும் 15ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட அரங்குகள்; லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ரிப்பன் வெட்டி நேற்று துவங்கி வைத்தார். நான்கு அடி உயரமுள்ள சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் நுால்கள் மற்றும்திருவள்ளூர் சிலை பொருத்தப்பட்ட திறந்த பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாண்டிசெல்வன் கூறுகையில், &'&'கடந்த எட்டு ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடக்கிறது. மாணவ - மாணவியர் அதிக புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.தினமும் மாலை வேளைகளில், கருத்தரங்கம், பேச்சு போட்டி, விளையாட்டு, கவிதை போட்டிகள் நடக்க உள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்