உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் விருதுகள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் வழங்கப்படும், 2022ம் ஆண்டுக்குரிய சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, செப்., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, 2022ம் ஆண்டுக்கான, சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.environment.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இம்மாதம் கடைசி தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, செப்., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்