உள்ளூர் செய்திகள்

தலைமுறை கடந்தும் உதவும் ஆயுஷ் மருத்துவம்!

சென்னை: ஆயுஷ் மருத்துவ முறை, தலைமுறை கடந்தும் வாழ்வியல் முறைக்கு உதவி வருகிறது என மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேசினார்.தேசிய ஆயுஷ் மிஷினின் பிராந்திய ஆய்வு கூட்டத்தை, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இணை அமைச்சர் முன்ஜ்பாரா ஆகியோர், சென்னையில் நேற்று துவக்கி வைத்தனர்.அதில், சர்பானந்தா சோனாவால் பேசியதாவது:நம் பாரம்பரிய மருத்துவமுறை பல தலைமுறைகளை கடந்து, இன்றும் நம் வாழ்வியல் முறைக்கு உதவி வருகிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி போன்றவற்றின் மருத்துவ பயன்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும். நவீன மருத்துவத்துடன், பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிவியல் பூர்வமாக ஒருங்கிணைத்து, மக்களை நோய்களில் இருந்து குணப்படுத்துவது மட்டுமில்லாமல், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உதவ வேண்டும்.மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆயுர்வித்யா, சுப்ரஜா, வயோமித்ரா போன்ற, பள்ளிக் குழந்தைகளுக்கான ஆரோக்கிய வாழ்வு முறை, முதியோர் சிகிச்சை திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளில், எட்டு கோடி மக்கள், ஆயுஷ் மருத்துவத்தை நாடி வந்துள்ளனர். சித்த மருத்துவம், மனித வாழ்வை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றி வருகிறது. யோகா போன்ற மருத்துவ முறைகளை, இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டவரும் பின்பற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.திருச்சியில் சித்தா நிலையம்!மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலிடம், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த கோரிக்கை மனு:* டில்லியில், அனைத்து இந்திய ஆயுர்வேத நிலையம் உள்ளதை போல, பாரம்பரிய மருத்துவத்தில், தமிழகத்தில் உயர்தர சிகிச்சை வசதியை ஏற்படுத்த, திருச்சியில் அனைத்து இந்திய சித்தா நிலையத்தை அமைக்க வேண்டும்* மதுரை, திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, திருப்பரங்குன்றம், புதுப்பட்டி கிராமத்திற்கு மாற்றம் செய்ய, நிதியுதவி அளிக்க வேண்டும்* கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேதா மருத்துவமனையில், கூடுதலாக, 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும், சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லுாரியில், வர்மம் சிகிச்சை முறைக்கான சிறப்பு மையம் அமைக்கவும் நிதியுதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்