புத்தக அறிமுகம்: சட்டம் பெண் கையில்
சமூகத்திற்கான சட்டங்களை தாண்டி, குறைந்தபட்சம் குடும்பத்திற்கான சட்டங்களையாவது நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்படி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்களை தெளிவாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் படியும் விவரித்துள்ளார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் குறித்த விளக்கம் எல்லாம் பெண்களுக்கு பெரிதும் உதவுபவை. பரம்பரை சொத்தில் பெண்களுக்கு பங்குண்டு என்பது பற்றிய கட்டுரையும் சிறப்பு. தலைப்பிற்கேற்ப பெண்கள் குறித்த சட்டங்கள் அதிகமாக இருந்தாலும், நுகர்வோர், ஆதார், மனித உரிமை, உயில் குறித்த சட்டங்களும் விளக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் : வைதேகி பாலாஜி, அலைபேசி : 75500 98666