அகழாய்வு பணிகள் பள்ளி மாணவர்கள் பார்வை
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல் குளத்தில் நடந்து வரும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள், கண்காட்சியினை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல் குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே நடந்த முதல் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த 3254 பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியினை பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வெம்பக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர்.