உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு சட்ட பல்கலை பதிவாளர் அறிவுரை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லுாரி சார்பில், தனியார் மகாலில் அதிகாரம் பகிர்ந்து அளித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் ஜெம்ஸ் ஜெயபால் தலைமை வகித்தார். திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை பதிவாளர் பாலகிருஷ்ணன் கருத்தரங்கை துவக்கிவைத்து பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு லோக்சபா, நீதிமன்றம், நிர்வாகம் ஆகியவை தங்களுக்குரிய அதிகாரங்களை கடைபிடிக்க வேண்டும்.தனியார் சட்டக் கல்லுாரிகளுக்கு இணையாக அரசு சட்டக்கல்லுாரி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். தங்களது அறிவை மேம்படுத்தி, ஆற்றலை பெருக்க வேண்டும், என்றார். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவிபேராசிரியர் மாணிக்க விநாயகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்