பாரதியார் பல்கலை எம்.பில்., பி.எச்டி.,தேர்வு அறிவிப்பு
கோவை: பாரதியார் பல்கலையின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு, 2024 ஜன., 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கான கட்டணத்தை, நவ., 17 ம் தேதிக்குள் செலுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலை, கோவை -641046 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும், விபரங்களுக்கு பல்கலை இணையதளத்தை பார்க்கலாம்.