உள்ளூர் செய்திகள்

மாணவர்களை பிடித்தாட்டும் போதை: போலீஸ் வேடிக்கை

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, அதிக பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளைக் கொண்ட உயர் கல்வி கேந்திரமாக கோவை உள்ளது. தனியார் கல்லுாரிகளில், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கல்லுாரி ஹாஸ்டல்களிலும், அறை எடுத்துத் தங்கியும் படித்து வருகின்றனர்.போதைப்பொருள் வர்த்தகம்கடந்த சில ஆண்டுகளாக, இந்த மாணவர்களைக் குறி வைத்து, போதை வர்த்தகம் அபரிமிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக, கோவையிலுள்ள கல்லுாரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம், அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.சமீபத்தில், கோவையிலுள்ள ஒரு பிரபல தனியார் தொழில்நுட்பக் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள், ஜூனியர் மாணவரைத் தாக்கி மொட்டை அடித்து, ராகிங் செய்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்தில் தொடர்புடைய, ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த போதைப் பொருட்கள் புழக்கம், எப்.ஐ.ஆரில், மறைக்கப்பட்டுள்ளது.கச்சேரியில் நடந்த கச்சேரிசில வாரங்களுக்கு முன்பு, அவினாசி ரோட்டில் கல்லுாரி மாணவர்கள் இரு குழுவாக மோதிக் கொண்டனர். அதில் பலர் காயமடைந்தனர். வெளியிலிருந்து ஆட்களைக் கூப்பிட்டு வந்து, கல்லுாரி மாணவர்கள் சிலரைத் தாக்கியுள்ளனர். அதேபோன்று, கோவையில் நடந்த பிரபல இசையமைப்பாளர் கச்சேரியின்போதும், கல்லுாரி மாணவர்கள் சிலர், பகிரங்கமாக ரோட்டில் அடித்துக் கொண்டனர்.இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் பெரும்பாலும், கஞ்சா பயன்படுத்துவது, விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தளவுக்கு கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதற்கும், அதே கல்லுாரிகளைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்களையே பயன்படுத்துவதையும், போலீசார் கண்டறிந்துள்ளனர்.மகளிர் விதிவிலக்கல்லகோவையிலுள்ள சில தனியார் கல்லுாரிகளின் ஹாஸ்டல்களில் கண்காணிப்பே இல்லாத காரணத்தால், மது பாட்டில்கள், கஞ்சா, போதை மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் போன்ற புதுப்புது போதைப் பொருட்கள் மானாவாரியாகப் புழங்குகின்றன. இது ஏன்...மகளிர் விடுதிகளிலும் மது சர்வ சாதாரணமாகி விட்டது. இவற்றைத் தடுப்பதற்கு, ஒரு சில கல்லுாரி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று போலீஸ் உயரதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,அருண் கூறுகையில், கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்து வருகிறோம். அதனால் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆட்களின்றி, ரயிலில் கஞ்சா கடத்துவதால் கண்டுபிடிப்பது கஷ்டமாகவுள்ளது. நடவடிக்கை இன்னும் தீவிரமாகும் என்றார்.ஆனால் கோவையில் மாநகர, ரூரல் போலீசாருக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால், காவல் எல்லைப் பகுதிகளை, மாறி மாறி பயன்படுத்தி, கஞ்சா மற்றும் போதைப் பொருள் வியாபாரிகள் தப்பி வருகின்றனர்.தொண்டாமுத்துார், ஆலாந்துறை உள்ளிட்ட போலீஸ் எல்லைப் பகுதிகளில், கஞ்சா வியாபாரிகள் ஏராளமாக முகாமிட்டிருப்பதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில், தமிழக அரசு தனி கவனம் செலுத்தி, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள், கல்லுாரி மாணவர்களுக்குக் கிடைப்பதைத் தடுக்க, வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கு மாநகர, ரூரல் போலீசார், கல்லுாரி நிர்வாகங்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகள் என பல தரப்பினரும் இணைந்து, நடவடிக்கை எடுப்பது அவசியம்.இல்லாவிடில், உயர் கல்விக்கு பெருமை பெற்ற கோவை, உயர்போதைகளின் புகலிடம் என்ற அவப்பெயருக்கு உள்ளாக நேரிடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்