உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்
சென்னை: அரசு மேல்நிலை பள்ளிகளில், தேவைக்கு அதிகமாக உள்ள முதுநிலை ஆசிரியர்களை இடமாறுதல் செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட கூடுதலாக உள்ள முதுநிலை ஆசிரியர்களை, தேவையுள்ள இடங்களுக்கு, அந்தந்த மாவட்டங்களுக்குள் இடமாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும் 20ம் தேதி நேரடி கவுன்சிலிங்காக இடமாறுதல் வழங்குமாறு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.