உள்ளூர் செய்திகள்

ஜோரா இருக்குது பழங்குடியினர் தயாரித்த கைவினைப்பொருட்கள்

கோவை: அழகான கைவினைப் பொருட்களுக்கென, ஒரு இடம் கோவையில் இருக்கிறது. கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், கவுலி பிரவுன் ரோட்டில் இந்த விற்பனை மையம் செயல்படுகிறது.இம்மையத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பழங்குடியினரின் தயாரிப்புகளான வீட்டு அலங்காரப் பொருட்கள், பழமையான பொம்மைகள், ஓவியங்கள், படுக்கை விரிப்புகள், பெண்களுக்கான குர்தீஸ், ஆடைகள், துாபக்கால், டேபிள் வெயிட் இப்படி வீட்டுக்குத் தேவையான கைவண்ணமிக்க கைவினைப் பொருட்கள் அணிவகுக்கின்றன.விற்பனை மைய நிர்வாகி ஜெயபால் கூறுகையில், இங்கு நாடு முழுவதிலும் உள்ள, பழங்குடியின மக்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் இதேபோன்று, 120 க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.சுத்தமான தேன், ஜவுளி, படுக்கை விரிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன. குறைந்தபட்சம், 12 ரூபாயில் இருந்து ரூ.30 ஆயிரம் வரையிலான பொருட்கள் உள்ளன. பழங்குடியினரின் தயாரிப்புகளுக்கு, உரிய விலை கிடைக்கவே இம்மையம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்