உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய காய்கறி சாகுபடி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு: பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள், மாவட்ட அளவிலான விருது பெற விண்ணப்பிக்கலாம்.இது குறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை மூலம், 2023-24ல் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில், பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருது வழங்கப்படுகிறது.அதிக பாரம்பரிய காயக்றி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண் வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் அடிப்படையில் சிறந்த இரு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதல் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். சொந்த, குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், www.tnhoriticulture.tn.gov.in இணையதளம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 100 ரூபாய் கட்டணத்துடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்