உள்ளூர் செய்திகள்

ஆசிரியை மீது புகார் சி.இ.ஓ., விசாரணை

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் துடியலுார் அருகே அசோகபுரம் அரசு பெண்கள் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி ஒருவரை பயிற்சி ஆசிரியை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.மாணவியின் உறவினர் கூறுகையில் ஆசிரியை சில நாட்களாகவே மாணவியிடம் மத ரீதியான பாகுபாடுடன் நடந்து வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்ததால் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்; போலீசாரும் விசாரித்தனர். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.அரசுப் பள்ளி தரப்பினர் கூறுகையில் இங்கு எந்த மாணவியும் மத ரீதியான மற்றும் பிற துன்புறுத்தலுக்கு ஆளாக்கவில்லை என்றனர். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில் முழுமையான விசாரணை முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்