சாலை பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
புதுச்சேரி: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.லாஸ்பேட்டை மாநில பயிற்சி மையம் மற்றும் புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஒருங்கிணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சி முகாம், கடந்த 21ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த முகாம் நேற்று நிறைவுபெற்றது.நிகழ்ச்சியில், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி வரவேற்றார். போக்குவரத்துத்துறை எஸ்.பி., மாறன் சிறப்புரையாற்றினார். மாநில பயிற்சி மையத்தின் சிறப்பு அதிகாரி, சுகுணா சுகிர்தபாய் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சிவக்குமார், மணநாதன், ஜாகிர்ஹூசேன், ஜோசப், தையல்நாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.