உள்ளூர் செய்திகள்

தமிழ் படைப்பாளிகளை கவுரவிக்கும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம்

மறைமலை நகர்: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் பேராயம் சார்பில் தமிழ் படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படைப்பாளிகளுக்கு எஸ்.ஆர்.எம்., தமிழ் பேராயத்தின் விருது மற்றும் பரிசுத்தொகையான 13 லட்சத்தையும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வழங்கினார்.இதில், சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று விருது பெற்றவர்களை வாழ்த்தினார். இதில், பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது, எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் பேராய தலைவர் கரு.நாகராஜன் வரவேற்புரை வழங்கினார். இதில், 11 தமிழ் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.எஸ்.ஆர்.எம்., கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் பேசியதாவது:தமிழ் பேராயத்தின் வாயிலாக, 11 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் படைப்பாளிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். 2014ல் குஜராத் முதல்வராக இருந்த மோடியை அழைத்து வந்து என் தாயின் சிலையை திறக்க வைத்தோம்.அப்போது, நீங்கள் ஆறு மாதத்தில் பிரதமராக வருவீர்கள் என கூறினேன். வரும் காலங்களில், தமிழகத்தில் இருந்து ஒரு திறமையான பிரதமர் நிச்சயம் வருவார்.இவ்வாறு அவர் பேசினார்.பின், அண்ணாமலை பேசியதாவது:எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் உலகளவில் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது. தமிழ்மொழி 1,000 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதற்காக, சிறந்த தமிழ் படைப்பாளிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி அற்புதமானது. இது இப்பல்கலைக்கழகத்தின் வேந்தரின் தமிழ் பற்றை காட்டுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்