விளையாட்டு அறிவியல் படிப்பு ஐ.ஐ.டி.,யில் அறிமுகம்
இதற்கான பதிவு, nptel.ac.in/courses என்ற இணையதளத்தில், பிப்ரவரியில் மேற்கொள்ளப்படும். இந்த படிப்புக்கு நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். ஒரு பாடப்பிரிவுக்கு, 1,000 ரூபாய் தேர்வு கட்டணம். செயல் திறன் மேம்பாடு, உணவு மற்றும் பயிற்சி முறைகளை கண்காணித்தல், மீட்பு திட்டங்களை உருவாக்குதல் என, பல அம்சங்கள், விளையாட்டு அறிவியல் பாடத்தில் இடம்பெறும்.விளையாட்டு ஊட்டச்சத்து, காயத் தடுப்பு, பயிற்சிகளின் அடிப்படைகள், வலிமை சீரமைப்பு, விளையாட்டு உளவியல் போன்ற அம்சங்களும் இதில் இடம் பெற்று உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், இந்த படிப்புகளில் சேரலாம். பிசியோதெரபி, உடற்கல்வி துறைகளில் பட்டப்படிப்பு மேற்கொள்வோர், இந்த ஆன்லைன் படிப்பில் சேர்ந்தால் மிகவும் பயனளிக்கும்.விபரங்களை, www.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர், ஆன்ட்ரூ தங்கராஜ் கூறினார்.