உள்ளூர் செய்திகள்

தமிழறிஞர்களுக்கு விருதுகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை, தமிழறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், பாலமுருகனடிமை சுவாமிக்கு, 2024ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது; பத்தமடை பரமசிவத்துக்கு, 2023ம் ஆண்டுக்கான அண்ணா விருது; காங்., பிரமுகர் பலராமனுக்கு காமராஜர் விருது; கவிஞர் பழனிபாரதிக்கு பாரதியார் விருது; கவிஞர் முத்தரசுக்கு பாரதிதாசன் விருது; பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபனுக்கு, திரு.வி.க., விருது; முனைவர் கருணாநிதிக்கு கி.ஆ.பெ., விசுவநாதம் விருது வழங்கப்பட்டது.அவர்களுக்கு விருது தொகையாக, தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை போர்த்தி, முதல்வர் பாராட்டினார். அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, கயல்விழி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்