உள்ளூர் செய்திகள்

பசுமை முதன்மையாளர் விருது: விண்ணப்பம் வரவேற்பு

செங்கல்பட்டு: தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:தமிழ்நாடு மாசுக் காட்டுப்பாடு வாரியம், 2023-24ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுகளை, நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.ஒவ்வொர் ஆண்டும், 100 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு, புதுமையான பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள்.நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் கடலோர பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில், www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை, செங்கல்பட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.பசுமை முதன்மையாளர் விருது 2023க்கான முன்மொழிவை, கலெக்டரிடம் ஏப்., 15ம் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்