உள்ளூர் செய்திகள்

இலக்கிய மாமணி விருது விருதாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்பு தமிழ் ஆகிய வகைப்பாட்டில், மூன்று அறிஞர்களுக்கு, ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகிறது.கடந்த 2022ம் ஆண்டு, இலக்கியமாமணி விருது பெற, கள்ளக்குறிச்சி மாவட்டம், அரங்க ராமலிங்கம், 68; விருதுநகர் மாவட்டம், கோதண்டம், 83; கோவை மாவட்டம், சூர்யகாந்தன், 67, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாளையொட்டி, சிறப்பு நேர்வாக, நீலகிரி மாவட்டம் மணி அர்ஜுனன், 70; திருவாரூர் மாவட்டம் திருவிடம், 77; சென்னை மாவட்டம் பூரணச்சந்திரன், 74, ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அடுத்து 2023ம் ஆண்டு கலைமாமணி விருதுக்கு, கடலுார் மாவட்டம் மாணிக்கவாசகன், 94; திருநெல்வேலி மாவட்டம் சண்முகசுந்தரம், 73; சிவகங்கை மாவட்டம் நடராசன், 64, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்