அரசு பள்ளியில் காந்தி நினைவு நாள்
மேட்டுப்பாளையம்: காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்கள், காந்தியின் முகமூடியை அணிந்து, உறுதிமொழி எடுத்தனர்.காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சி, காந்திநகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காந்தியின் நினைவு தினத்தை, அனுஷ்டிக்கும் நிகழ்ச்சி, பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை புனிதா செல்வி தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் காந்தியின் முகமூடி அணிந்து, உள்ளத்தில் காந்தி தாத்தாவைப் போல் வாழ்ந்து காட்டுவோம் என, உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர் ஜெயராமன், ஆசிரியைகள் செல்வி, அக்சாள் மற்றும் பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.