உள்ளூர் செய்திகள்

சின்னவீரம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

உடுமலை: உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.கல்வியாண்டு தோறும், அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு மேம்பாடு, குழுக்கள் அமைத்தல், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பாடு, மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துதல், போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் பள்ளியின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, அப்பள்ளி தலைமையாசிரிருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, மாநில அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.அவ்வகையில், 2022 - 23 கல்வியாண்டுக்கான விருது நேற்று வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் இன்பகனிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.தலைமையாசிரியர் இன்பகனி கூறுகையில், பள்ளியின் தரம் பல்வேறு நிலைகளிலும் உயர்ந்துள்ளது. அதற்கான அங்கீகாரமாகவும், மேலும் பள்ளியின் நிலையை உயர்த்துவதற்கான ஊக்கமாகவும் இந்த விருது கிடைத்துள்ளது. மேலும், பரிசுத்தொகையாக பள்ளிக்கான மேம்பாட்டு பணிகளுக்கும், 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், மாநில அரசின் சார்பில் வழங்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்