தொடக்க கல்வி ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
தேனி : உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.இப்படிப்பில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள், மாணவிகள் http://scert.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ரூ.500, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ரூ.250 செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 73730 03457 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.