உள்ளூர் செய்திகள்

தொல்லியல் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

சென்னை: சென்னை அரசு அருங்காட்சியகத்தில், வரலாற்றுத் துறை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், வரும் 24, 25ம் தேதி நடக்க உள்ளது.நமது கலை மற்றும் தொல்லியல் அறிவோம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடக்க உள்ளது.பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து பங்கேற்கும் கல்வியாளர்களுக்கு, நமது கலை மற்றும் தொல்லியல் குறித்து, விரிவான புரிதலை ஏற்படுத்துவதே இப்பயிற்சி முகாமின் நோக்கமாகும்.இம்முகாமில், சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில், வரலாற்றுத் துறையில் பணியாற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.இரண்டு நாள் முகாமில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்; மதிய உணவு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்