கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கோவை: கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.கோவை மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாவட்டத்திற்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18.07.2024) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.