வங்கதேச மாணவியை திருப்பி அனுப்ப உத்தரவு
சில்சார்: இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒப்பந்த அடிப்படையில், அசாமின் சில்சாரில் உள்ள என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், 70 வங்கதேச மாணவர்கள் படித்து வருகின்றனர்.அவர்களில் மைஷா மஹாஜபின் என்ற மாணவியும் ஒருவர். அதே சில்சார் என்.ஐ.டி.,யில் படிப்பை முடித்து, தற்போது வங்கதேசத்தில் வசித்து வரும் சஹாதத் ஹுசைன் அல்பி என்பவர் இந்தியாவுக்கு எதிரான ஒரு பதிவை பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவுக்கு, மாணவி மைஷா மஹாஜபின், ஹார்ட்டீன் விருப்பக்குறி போட்டிருந்தார்.இதையறிந்து பலரும் கோபமடைந்தனர். ஹிந்து ராக்கி தளம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், தனக்கு எதிர்ப்பு கிளம்பியதால், மாணவி மஹாஜபின் மீண்டும் வங்கதேசம் செல்வதாக கல்லுாரி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, அவர் மீண்டும் தன் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.