அங்கன்வாடி மையம் இடம் மாற்ற முடிவு
தங்கவயல்: உரிகம்பேட்டையில் இரண்டு அங்கன்வாடி மையங்களை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.உரிகம்பேட்டை அரசு பள்ளியில் இரு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், முறைகேடுகள் நடப்பதாகவும், கட்டடம் சிதிலமடைந்து உள்ளதாகவும், பாதுகாப்பும் இல்லை என்றும் தெரியவந்தது.சோதனைஇதனால் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, துணைத் தலைவர் ஜெர்மன் ஜூலியட், ஆணையர் பவன் குமார் உட்பட நகராட்சி அதிகாரிகள் அங்கன்வாடி மையங்களில் சோதனை நடத்தி, அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்தனர்.ஒரு மையத்தில் 12 பேரும், இன்னொரு மையத்தில் 18 பேரும் இருப்பதாக, ஆஜர் புத்தகத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. ஆனால், ஆறு வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு விபரங்கள் குறித்து விசாரித்தனர்.தலையில் விழுந்தால்...கர்ப்பிணியர் எத்தனை பேர் வருகின்றனர்; அவர்களுக்கு அரசின் சத்துணவு வழங்கப்படுகிறதா. குழந்தைகளே வரவில்லையே, ஏன். இந்த கட்டடம் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்துள்ளதே. குழந்தைகள் தலையில் விழுந்தால் என்னாவது. இது பற்றி திட்ட அதிகாரியிடம் தெரிவித்தீர்களா. இந்த கட்டடத்திற்கு மாற்றாக வேறு கட்டடம் உள்ளதா என நகராட்சி ஆணையர் பவன் குமாரிடம், எம்.எல்.ஏ., கேட்டார்.அப்பகுதியில் பூட்டி வைத்திருக்கும், போலீஸ் அவுட் போஸ்ட் அறையை அங்கன்வாடி மையத்துக்கு பயன்படுத்தலாம் என, பவன்குமார் தெரிவித்தார். தங்கவயல் எஸ்.பி.,யை அணுகி அனுமதி பெறப்படும் என்று எம்.எல்.ஏ., பதிலளித்தார்.